வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

சனி, 5 ஜூலை, 2008

மானங்கெட்ட செயலுக்கு மன்னிப்பு ஒரு கேடா?


கடந்த 28.6.2008இல் பேரா மாநில சட்டமன்றக் கூட்டத்தில், "பாம்பையும் இந்தியரையும் கண்டால் முதலில் இந்தியரை அடிக்க வேண்டும் என்று ஒரு பழமொழி இருக்கிறது" என அமிடா ஒசுமான் என்ற சட்டமன்ற உறுப்பினர் பேசியுள்ளார். இவருடைய இந்தத் தன்மூப்பான பேச்சு தமிழ் மக்களிடையே மிகப்பெரிய சீற்றத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள தமிழர் சார்ந்த அரசியல், பொது இயக்கங்கள், தனியாட்கள் என பல தரப்பினரும் தங்களின் எதிர்ப்பைப் பகிரங்கமாகக் காட்டினர். இதனையடுத்து, பேரா மாநில சுங்கை ரப்பாட் சட்டமன்ற உறுப்பினருமான அப்பெண்மணி தமிழ் மக்களிடத்தில் மன்னிப்புக் கோரினார். மேலும், மாநில அம்னோ கட்சியும் பகிரங்க மன்னிப்பைக் கோரியது. தமிழரைச் சிறுமைப்படுத்தியுள்ள அந்தச் சட்டமன்ற உறுப்பினரைத் தமிழுயிரும் மிக வன்மையாக கண்டிக்கிறது.
 • இந்தியரைப் பாம்பென்பார்
  எதிர்கண்டால் அடியென்பார்
  இனவெறுப்பை மூட்டிவிடும்
  ஈனரைத் தாக்கு வீரே!

  படித்த இனமென்பார்
  பண்பாளர் தாமென்பார்
  பகையுணர்ச்சி ஏற்படுத்தும்
  பாவிகளைத் தாக்கு வீரே!

  ஓட்டுக்கேட்டுக் கால்பிடிப்பார்
  ஓடிவந்து உதவிடுவார்
  உடனிருந்து உயிர்கொல்லும்
  ஓநாயைத் தாக்கு வீரே!

  மானங்கெட்டச் செயல்புரிவார்
  மன்னிப்பும் கேட்டுவைப்பார்
  மடத்தனத்தில் ஊறிக்கிடக்கும்
  மடைச்சியைத் தாக்கு வீரே
  !
 • ~ஆக்கம்:- ஆய்தன்~
@ஆய்தன்:-
வலியோர்சிலர் எளியோர்தமை
வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?
-பாவேந்தர் பாரதிதாசனார்

6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

என்னவென்று சொல்லுவதோ?
எப்படித்தான் திட்டுவதோ?
மூளைகெட்ட இவளுக்கு
ஏனித்தக் கொழுப்பு?

எதனாலே அடிக்கலாம்?
எங்கேதான் மொத்தலாம்?
மானங்கெட்ட இவளுக்கு
ஏனிந்தத் திமிரு?

தமிழன்பன்,
இனியன்,
இரவூப்பு, பகாங்கு

பெயரில்லா சொன்னது…

தமிழன் பாம்பைவிட கொடியவனா ? அப்படியென்றால் தமிழன் ஓட்டு மட்டும் எதற்கு?

இப்ப வாங்கிய அடி போதாது உங்களுக்கு ? அடுத்த தேர்தலில் பாருங்க எங்க மானமுள்ள தமிழனின் ஒற்றுமையை

அன்புடன்
மானமுள்ள தமிழன்

பெயரில்லா சொன்னது…

தமிழன் குட்டக் குட்டக் குனிந்த காலம் மலையேறிவிட்டது. இனி, தமிழன் மேல் விழும் ஒவ்வொரு அடிக்கும் பதிலடி கிடைக்கும் என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

முடிந்த பொதுத் தேர்தலில் தமிழன் கொடுத்த மரண அடியை மறந்து திரியும் சிலருக்கு இன்னும் புத்தி வரவில்லை போல் இருக்கிறது.

தமிழனை மதிக்காமல் இப்படியே நிலைமை தொடர்ந்து சென்றால், அடுத்த 5 ஆண்டுகளில் இன்னும் பெரிய பூகம்பத்தைத் தமிழர்கள் ஏற்படுத்துவார்கள் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.

மானங்கெட்ட செயலுக்கு மன்னிப்பு ஒரு கேடா என்ற கவிதை மிக மிக அருமையாக உள்ளது. உள்ளத்தில் உணர்ச்சியைத் தூண்டிவிடுகிறது.

-இளையவேல்,
சிரம்பான்.

பெயரில்லா சொன்னது…

இவர் தேர்தலில் வெற்றி பெருவதற்கு எத்தனை இந்தியர்களின் ஓட்டு இவருக்கு கிடைத்திருக்கும். அந்த இந்தியர்களை எல்லாம் இவ்வளவு சீக்கிரம் மறந்து விட்டாரா....???
யோசிக்காமல் பேசிவிட்டாரா அல்ல்து இவர்கள் என்ன செய்து விட முடியும் என்ற இருமாப்புடன் அறிந்தே பேசினாரா?...கடவுளுக்க்குத்தான் வெளிச்சம்...ஆனால் பேசிய பிறகு கிடைத்த சாட்டை அடியின் வேகம் நம் இந்தியர்களின் விழிப்புணர்வை இவருக்கும் மற்றவர்களுக்கும் நன்றாகவே உணர்த்தியிருக்கும்...

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

//யோசிக்காமல் பேசிவிட்டாரா அல்ல்து இவர்கள் என்ன செய்து விட முடியும் என்ற இருமாப்புடன் அறிந்தே பேசினாரா?...//

தோல்வியின் பயமும் வெட்கமும் நிலைதடுமாற செய்துவிட்டது. தன்னிலை அறியாத பேச்சு... மக்கள் பிரதிநிதியாக இருக்க தகுதி இல்லை என்பதை அவர் உணர்ந்திருக்காவிட்டால், அவரின் அறியாமையை நினைத்து பரிதாபப்படுகிறேன்.

பெயரில்லா சொன்னது…

இதே ஒரு தமிழர் இவ்வாறு பேசியிருந்தால், இந்நேரம் அவர் கதி என்னவாயிருக்கும்? அவ(க)ளுக்கு ஒரு ஞாயம் நமக்கு ஒரு ஞாயமா?