வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

ஞாயிறு, 11 மே, 2008

வண்டவாளம்..!(3) அலார அறிவிப்பாளன்


பெயர்:- கொலைச்செல்வன்

தொழில்:- அசுட்றோ வானவில் அலாரம் நிகழ்ச்சி அறுவிப்பாளரு

தொழில் தகுதி:- ஒளறி ஒளறி தமில் பேசணும்; ஒழுக்கங்கெட்ட தனமாக நடந்துக்கணும்; ஒழுங்கா இருக்கும் இளைஞரைக் கெடுக்கணும்.

கல்வித் தகுதி:- தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் மறந்து போகிற அளவுக்கு படித்திருக்கேன்.

தமிழ்த் தகுதி:- என்னோட மம்மி(பிணம்)தான் தமில் சொல்லிக் கொடுத்திச்சி.


பொழுது போக்கு:- கேடு கெட்ட இளைஞர்களை தேடிப் பிடிப்பது

அறிவிப்பாளர் ஆனதற்குக் காரணம்:- என் வயித்த பார்த்தா தெரியலயா? எல்லாம் வயித்து பொழப்புதான்!

அலாரம் நிகழ்ச்சியின் நோக்கம்:- இளைஞர்களை நாரடிக்கும் கேவலங்கள், கோணங்கித் தனங்கள், நாய்த்தனங்கள், நரித்தனங்கள் எல்லாவற்றையும் நியாயப்படுத்துவது.

அடிக்கடி சொல்வது:- அலாரம் தொடர்ந்து அடிக்கும்..

எரிச்சல் செய்வது:- காலையில் குறட்டைவிட்டு தூங்கும்போது அலாரம் அடிப்பது.

வெறுப்பு ஏற்றுவது:- எங்க அப்பன் தமிழன் என்பது.

@ஆய்தன்:-
அலாரம் தொடர்ந்து அடித்தால் இன்னும் அதிகமான இளையோர்கள் நாறிப்போவதும்.. நாசமாகிப் போவதும் உறுதி! அலாரத்தைத் தலையிலே தட்ட வேண்டும்!

5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

சம்பந்தபட்ட தொலைக்காட்சி அலைவரிசைக்கோ அதன் தயாரிப்பாளர்களுக்கோ இது புரிவதில்லையே ஏன்? காரணம் அதன் தலைமைத்துவம்!!!!

எதிர்பாராதவிதமாய் உங்கள் வலைப்பதிவு அறிமுகமானது.. வாழ்த்துகள்... தொடர்ந்து எழுதுங்கள்

பெயரில்லா சொன்னது…

அலாரம் நிகழ்ச்சி நானும் பார்த்தேன். அருஅருப்பாக உள்ளது. மிகவும் அநாகரீகமாக பேசி நடந்துகொள்கிறார்கள். அவர்களுக்கு நல்ல இளைஞர்கள் கிடைக்கவில்லையா?

பெயரில்லா சொன்னது…

அரைகுறை தமிழ்ப் பேசும்
அறுவை அறிவிப்பாளன்
திக்கித்தடுமாறி தமிழ்ப் பேசும்
தகிடுதத்தம் விருந்தினர்கள்
உளறிக்கொட்டித் தமிழ்ப் பேசும்
உருப்படியில்லா இளைஞர்கள்
அடியாள் போன்ற தோற்றத்தில்
தடியாள் வாலிபர்கள்
ஒட்டுத்துணி கட்டி வரும்
ஒழுக்கங்கெட்ட இளம்பெண்கள்
இப்படிக் கேடுகெட்டக் கூட்டணி
நிகழ்ச்சி படைக்குது - அதற்கு
அலாரமுன்னு பேரு!

தமிழன்பன்,
இனியன்,
இரவூப்பு, பகாங்கு

பெயரில்லா சொன்னது…

ஐயா அவர்களுக்கு என் இனிய தமிழ் வணக்கம். உங்கள் செய்தியைப் இனையத்தின் வழி படித்தவுடன் நானும் அந்நிகழ்வை பார்த்தேன், மனம் உடைந்து போனேன். இவரைப் போலவே தமிழைக் கொல்ல கூடியவர்கள் பலர் உள்ளனர். உதாரணத்திற்கு அஸ்டோரோ வெள்ளித்திரையில் சிரிப்பு டர்பார் என்ற நிகழ்வின் அறிப்பாளர் பேசும் தமிழ் நம் தாய்மொழியான தமிழையே கேவலப் படுத்துகின்றார். சிங்கப்பூரில் உள்ள தமிழர்கள் தமிழ் பேசும் பொழுது கோபம் அதிகமாகிறது. ஏன் இந்த சூழல். அங்கே தமிழ்மொழி நன்றாக போதிக்கபடவில்லையா? அல்லது அவர்கள் தமிழ் தாய்க்கு பிறக்கவில்லையா? ஏன் தமிழ் மொழியை நாசப்படுத்துகின்றனர்?

பெயரில்லா சொன்னது…

அலாரம் இளைஞர்களை மேலும் கெடுக்கிறது. தீய செயல்களையும் ஒழுக்கக் கேடுகளையும் ஞாயப்படுத்துகிறது. நிகழ்ச்சியின் இறுதியில் எந்தவொரு தீர்க்கமான முடிவையும் சொல்லாமல் மொட்டையாக நிகழ்ழ்சியை முடித்து விடுகிறார்கள். சுயமாக சரியாக சிந்திக்கத் தெரியாத இளைஞர்களை அலாரம் கெடுத்துவிடும் என்றால் அது பொய்யில்லை.

-ஒரு விரிவுரையாளன்