வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

புதன், 11 ஜூலை, 2007

தமிழே உயிரே வணக்கம்! வருக.. வருக.!

"உலகமெங்கும் தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால், மலேசியாவில்தான் தமிழர்கள் வாழ்கிறார்கள்." இது பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவாய்மொழி.

இதன் அடிப்படையில், மலேசியாவில் அரசு அணைப்படி அனைத்து உரிமைகளும் சலுகைகளும் பெற்று வாழ்வதற்குத் தமிழர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

அவற்றுள் ஒன்றுதான் தாய்மொழி உரிமை. மலேசியத் தமிழர்கள் தங்களின் தாய்மொழியாகிய தமிழைப் போற்றிக்கொள்ளவும் காத்துக்கொள்ளவும் வளர்த்துக்கொள்ளவும் உரிமை உள்ளது.

எனவே, இந்த அருமை வாய்ப்பைக் கையகப்படுத்தி, உயிரான தமிழை உயர்த்திப் பிடிக்க தமிழர்கள் முனைய வேண்டும். தமிழை உயிர்போல் மதித்துப் போற்ற வேண்டும். தமிழும் உயிரும் வேறல்ல; தமிழே உயிர் என்ற உணர்வு தமிழர்க்கு வேண்டும்.

ஆனால், இங்கே தமிழுக்கு அவ்வப்போது சில கேடுகளும் சிதைவுகளும் அழிவுகளும் ஏற்பட்டு வருகின்றது.

இதனை முன்னின்று செய்பவர்கள் தமிழால் பிழைக்கும் எமது தமிழ் உடன்பிறப்புகளே என்று எண்ணும்போது எமது இதயம் வலிக்கிறது.

இந்தத் தமிழ் அழிப்பு முயற்சிகளுக்கு எதிராகக் கொதித்தெழுந்து போராடி, காலங்காலமாக எமது தமிழ்மறவர்கள் வெற்றிபெற்று வந்துள்ளது மறுக்கவியலாத வரலாறாகும்.

அந்த வகையில், அண்மையக் காலத்தில் தமிழுக்கு எதிராக புதிய முறையில் புதிய கோணத்தில் அழிப்பு முயற்சிகள் நாட்டில் அவ்வப்போது தலைதூக்குகின்றன.

பல்துறை சார்ந்த தமிழ் உடன்பிறப்புகள் தமிழைப் பேணிக்காக்கும் பணியிலிருந்து இடறி, தமிழை எள்ளி நகையாடவும், கிள்ளி விளையாடவும், அள்ளி அழித்துப்போடவும் துணிந்துவிட்டனர் போலும்.

இந்த மாபாவச் செயலைத் தடுத்துநிறுத்தும் முயற்சியாக;
தமிழைப் பேணிக்காக்கும் பெருமக்களுக்கு உதவும் முயற்சியாக;
தமிழைப் பழிப்போரின் முகத்திரையைக் கிழிக்கும் முயற்சியாக;
எல்லாத் துறையிலும் தமிழை வளர்த்தெடுக்கும் முயற்சியாக;
அடுத்த தலைமுறைக்கு நல்லதமிழை கொடுத்துச் செல்லும் முயற்சியாக

இந்தத் 'தமிழுயிர்' வலையகம் தம் தமிழ்ப்பணியை முன்னெடுக்கும்.
இதற்கு எமது தமிழ் மக்கள் ஆசியும் ஆதரவும் வழங்கவேண்டும்.

உங்கள் எண்ணங்களையும் கருத்துகளையும் எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் கருத்துகளை எமக்கு அனுப்பித் தமிழுக்கு உரம் சேருங்கள்.
எங்கேயும் எப்போதும் தமிழின் கொடியை உயர்த்திப் பிடியுங்கள்!

எம் தமிழர் ஒன்றாதல் கண்டு – எமது பகைவர் எங்கோ மறையட்டும்!

  • ஆய்தன் : தமிழே உயிரே வணக்கம்!
  • தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்!
  • தமிழே உயிரே உன்நலன்; காப்பது ஒன்றே என்கடன்

8 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அன்புடையீர், வணக்கம்.
நம் மலேசியத்திற்கு இப்படி ஒரு இணையப் பக்கம் அவசியத்திலும் அவசியம். தமிழ்மொழி காக்கும் தமிழுயிர் வலையகத்தின் பணி சிறக்க நான் என் பங்களிப்பை வழங்குவேன். இனிய தமிழை இணைந்து காப்போம். தமிழ் வாழ்க! தமிழுயிர் வெல்க!

அன்புடன்,
தமிழ் நேசன் - சிரம்பான்.

பெயரில்லா சொன்னது…

தமிழுயிர் வலையகம் பார்த்தேன். நல்ல முயற்சி, நல்ல பணி, நல்ல நோக்கம். நான் என் முழு ஆதரவை தெரிவிக்கிறேன். மாலேசியாவில் தமிழ் நன்றாக வாழ்ந்தால்தான் தமிழன் நன்றாக வாழ்வான். நான் இனி தொடர்ந்து தமிழுயிர் வலையகத்தைப் பார்ப்பேன். என் கருத்துகளைக் கண்டிப்பாக எழுதுவேன். ஆய்தன் ஐயா அவர்களுக்கு நன்றி, இப்படி ஒரு வலையகம் தொடங்கியதற்காக!

பெயரில்லா சொன்னது…

Unggal 'TAMILUYIR' blogger paarthen. Seithigal ellam sirappaga ullathu. Inayattil enaku tamilil elutha theriyathu. Nan eppadi paditthu kolvathu. Uthavi thevai. Nandri Vanakkam.

from; Sathiyan,KL,my

பெயரில்லா சொன்னது…

திரு.ஆய்தன் அவர்களுக்கு வணக்கம். நம் தாய்மொழிக்கும் நம் நாட்டிற்கும் மிகவும் தேவையான ஒரு அகப்பக்கமாக இதை கருதுகிறேன். தமிழ்-தமிழர் என்ற போர்வையில் நிறைய புல்லிருவிகள் நம்மிடையே இருக்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் நல்ல சாட்டையடி கொடுப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன். உங்கள் தமிழ்ப்பணிக்கு என் வாழ்த்துகள்.

அன்பன்,
தமிழ்க்குமணன்
தலைநகர்

பெயரில்லா சொன்னது…

தமிழுயிர் மிகவும் 'கூ..ள்'. தமிழை மறக்கும் தமிழர்களுக்கு நல்லா சூடு கொடுப்பீங்கனு நம்புகிறேன். -சித்தன் சிவாஜி

பெயரில்லா சொன்னது…

தமிழுயிர் கண்டேன்
தமிழுணர்வு கொண்டேன்
தமிழுடன் வாழ்வேன்
தமிழுக்காய் வீழ்வேன்
தமிழோடு உயர்வேன்
தமிழுயர உழைப்பேன்.

தமிழன்பன்,
இனியன் - இரவூப்பு - பகாங்கு

பூங்குன்றன் வீரன் சொன்னது…

ஆய்தன் அவர்களின் முயற்சி பாராட்டுக்குரியது.

நன்றி

PJ சொன்னது…

நம்மவர் தமிழ் மொழியாற்றலை மேலும் வலுப்படுதத உதவும் நல்ல கட்டுரைகளை அவ்வப்போது வெளியிடுவது நலம் பயக்கும் என நான் கருதுகிறேன். செய்ய இயலுமா, நண்பரே?