வாக்கெடுப்பு(4) முடிவு
- தமிழ்க் கல்வியாளர்கள் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் பங்காற்றுகின்றனர்.
எழுதியோன்: ஆதவன் 3 மறுமொழி(கள்)
வகைமை:- வாக்குப் பெட்டி
எழுதியோன்: ஆதவன் 1 மறுமொழி(கள்)
எழுதியோன்: ஆதவன் 4 மறுமொழி(கள்)
வகைமை:- நறுக்குகள்
கடந்த 7.8.2008இல், மலேசியத் தெலுங்கு சங்கத்தின் தேசியத் தலைவர் மருத்துவர் அட்சயக்குமார் "தமிழ்ப்பள்ளிகளில் தெலுங்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று அச்சங்கத்தின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படும்" என்பதாக ஓர் அறிக்கையை தமிழ் நாளிதழ்களில் விடுத்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மறுநாள் மலேசியத் திராவிட இயக்கத்தின் தேசியத் தலைவர் மானமிகு இரே.சு.முத்தையா கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தார். தமிழ்ப்பள்ளிகளில் தமிழே பாடமாக இருக்க வேண்டுமே ஒழிய தெலுங்குக்கு அங்கே இடம் கொடுக்கக்கூடாது என கூறியிருந்தார். பிறகு, 10.8.2008இல், பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு அ.சிவனேசன் தெலுங்கு சங்கத்தின் அறிக்கையை வரவேற்றும் இரே.சு.முத்தையாவைக் கண்டித்தும் அறிக்கை விடுத்தார்.
இந்தச் சிக்கல் தொடர்பில் 'தமிழுயிர்' 20க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களைப் பெற்றது. 'தமிழுயிரின்' நிலைப்பாட்டை அறிய ஆர்வத்துடன் மின்னஞ்சல் விடுத்த தமிழுயிர் அன்பர்களை நன்றியோடு வணங்கி இந்த இடுகை வெளியிடப்பெறுகிறது. இந்தச் சின்ன செய்தி நச்சென்று இருக்குமென 'தமிழுயிர்' நம்புகிறது.
எழுதியோன்: ஆதவன் 6 மறுமொழி(கள்)
எழுதியோன்: ஆதவன் 4 மறுமொழி(கள்)
கதையைப் படிப்பதற்கு முன்னால் ஒரு பாட்டு. இதோ:-
அடிச்சான் பாரு பல்டி! - அவன
அடிக்கணும்டா செருப்ப கழட்டி!!
வாரிக் கொடுத்தது தமிழ்நாடு
வாழ வைத்தது தமிழ்ப்பாலு
பாட்டுதான் பாடி வச்சான் படத்துல – தமிழனுக்கு
வேட்டுதான் வச்சுப்புட்டான் இடுப்புல!
அடிச்சான் பாரு பல்டி! – அவன அடிக்கணும்டா செருப்ப கழட்டி!!
பத்தி எரிஞ்சது ஒக்கேனக்கல்
செத்து மடிஞ்சது தமிழ்மக்கள்
வேடம் போட்டு ஓடிவந்தான் குள்ளநரி – தமிழனுக்கு
மேட போட்டு குரல்கொடுத்தான் மொள்ளமாரி!
அடிச்சான் பாரு பல்டி! – அவன அடிக்கணும்டா செருப்ப கழட்டி!!
படமெடுத்தான் குசேலன்னு பேரு
தடபோட்டான் கன்னடத்து ஆளு
ஓடிப்போயி நக்கிட்டான்யா காலத்தான் – தமிழனுக்கு
வெடியவச்சி கிளப்பிட்டான்யா தூளுதான்!
அடிச்சான் பாரு பல்டி! – அவன அடிக்கணும்டா செருப்ப கழட்டி!!
சோறுபோட்ட தமிழனத்தான் மறந்துட்டான்
சுயநலந்தான் பெரிதெனவே காட்டிட்டான்
தன் இனமும் தன் மொழியும் பெரிசா போச்சு – தமிழனுக்குத்
தலையிலதான் மூனு நாமம் மிச்சமாச்சு!
அடிச்சான் பாரு பல்டி! – அவன அடிக்கணும்டா செருப்ப கழட்டி!!
இப்பவாச்சும் முழிச்சிக்கோடா தமிழா
எதிரிமூஞ்சைக் கிழிச்சுப்போடு தமிழா
சூடு சுரணை இன்னும் இருக்கும் இனமா? தமிழா நீ
செத்துவிட்ட நாரிப்போன பிணமா?
அடிச்சான் பாரு பல்டி! - அவன
அடிக்கணும்டா செருப்ப கழட்டி!!
...பாட்டு முடிந்தது. இனி, கதைக்கு வருவோம்..
**இது பழைய கதை:-
கடந்த மார்ச்சு 2008இல் தமிழ்நாடு ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தைத் தடுத்து கன்னட வெறியர்கள் கருநாடகத்தில் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர்களுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன; திரையரங்குகள் கொளுத்தப்பட்டன; தமிழகப் பேருந்துகள் எரிக்கப்பட்டன; கருநாடகத்தில் வாழும் தமிழ் மக்கள் அடித்துக் கொடுமைப்படுத்தப்பட்டனர். இந்த வெறித்தனத்திற்குக் கண்டனம் தெரிவித்து ஏப்பிரல் 4ஆம் நாள் தமிழ்த் திரையுலகக் கலைஞர்கள் மாபெரும் எதிர்ப்புக்கூட்டம் ஒன்றினை நடத்தினர். இக்கூட்டத்தில் பத்தோடு பதினொன்றாக 'சூப்பரு சுட்டாரு' இரசினிகாந்தும் கலந்துகொண்டார். மேடையில் தோன்றிய இரசினி, கன்னட வெறியர்களைக் கண்டிப்பது போலவும் அப்பாவித் தமிழ் மக்களை ஆதரிப்பது போலவும் உளறிக்கொட்டிக் கிளறிமுடினார்.
**இது புதிய கதை:-
இதனால் கர்நாடகாவில் ரசினிகாந்தின் 'குசேலன்' படம் வெளியாவதில் இருந்த சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ரசினியின் 'குசேலன்' படம் 15 திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. இப்படத்தின் ஒரு வாரத்துக்கான நுழைவுச்சீட்டுகள் அனைத்தும் ஏற்கனவே விற்றுத் தீர்ந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
*இது மானங்கெட்ட தமிழன் கதை:-
என்ன கொடுமை ஐயா இது!!! கன்னடத்தானுக்கு இருக்கும் மொழிப்பற்றும் இனப்பற்றும் தமிழனுக்கு இல்லையா? கன்னடத்தானைப் பார்த்தும்கூட தமிழன் திருந்தவே மாட்டானா? எவன் எவனோ வந்து ஏறி மிதித்தாலும் ஏமாற்றிப் பிழைத்தாலும் தமிழனுக்குப் புத்தி வராதா?
@ஆய்தன்:-
தமிழ்நாட்டுத் தமிழனுக்குச் சூடு சுரணை இருந்தால்..
உலகத் தமிழனுக்கு மானம் ஈனம் இருந்தால்..
மலேசியத் தமிழனுக்கு உணர்ச்சியும் உறுதியும் இருந்தால்..
'குசேலன்' படத்தைப் புறக்கணிக்க வேண்டும்!
'குசேலன்' படத்தை இரசினியின் கடைசி தமிழ்ப்படமாக ஆக்கவேண்டும்!
'சூப்பர் சுட்டாரை' மீண்டும் அவர் நாட்டுக்கே விரட்டியடிக்க வேண்டும்!
எழுதியோன்: ஆதவன் 5 மறுமொழி(கள்)
எழுதியோன்: ஆதவன் 3 மறுமொழி(கள்)
வகைமை:- பத்துக்குப் பத்து
எழுதியோன்: ஆதவன் 2 மறுமொழி(கள்)
வகைமை:- போட்டுத் தாக்கு