வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வெள்ளி, 14 டிசம்பர், 2007

மக்கள் தொலைக்காட்சி வருக! வாழ்க!முடக் குமுகாயத்தின்
மூன்றாம் கால்!
மக்கள் தொலைக்காட்சி.

தமிழ் மண் பயனுறும்
'ஒளி' உரம்!
மக்கள் தொலைக்காட்சி.

மறத்தமிழன் மாண்பின்
முரசு ஒலி!
மக்கள் தொலைக்காட்சி.

தொல்காப்பியத் தமிழின்
ஒளிச்சுவடி!
மக்கள் தொலைக்காட்சி.

ஒளிமயமான எதிர்காலக் காட்டி
தமிழுக்கும் தமிழனுக்கும்!
மக்கள் தொலைக்காட்சி.

ஆய்தன்: உலகத் தமிழரின் இல்லத்திரை! மக்கள் தொலைக்காட்சி நல்லத்திரை!


1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

மக்கள் தொலைக்காட்சி..
நிகழ்ச்சிகள் முத்துக்கள்!
நிகழ்ச்சித் தலைப்புகள் வைரங்கள்!
நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள் வைடூரியங்கள்!
மக்களுக்குப் பயந்தரும் அறிவுசார்ந்த நிகழ்ச்சிகளைப் படைக்கும் ம.தொலைக்காட்சியை எவ்வளவு பாராட்டினாலும் பொருந்தும். ம.தொ சூப்பரா அதிருதில்ல! நல்லதமிழ் பேசி தமிழையும் தமிழரையும் பெருமைபடுத்தும் ம.தொ சேவை தொடரவேண்டும். அதற்கு அஸ்ட்ரோ துணைபுரிய வேண்டும். நம்ம ஊரு தமிழ் வானொலி தொலைக்காட்சியாளர்கள் இப்போதாவது திருந்தி பாடம் படித்துக்கொள்ளட்டும்!

--:சித்தன் சிவாஜி