வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வெள்ளி, 14 செப்டம்பர், 2007

தனக்கொரு நீதி தமிழுக்கொரு நீதியா?



“தமிழ் நெடுங்கணக்கை மாற்றவேண்டுமா?” என்ற சிக்கலில் பொங்கியெழுந்த அத்தனை உணர்ச்சிகளையும் தமிழ் உணர்வாளர்களையும் சீண்டிப்பார்க்கும் வகையில் வார இதழ் ஆசிரியர் ஒருவர் தலையங்கம் தீட்டியுள்ளார். ஆறிப்போன புண்ணைச் சொறிந்து பார்த்திருக்கும் அந்த வார இதழ் ஆசிரியரைத் ‘தமிழுயிர்’ நினைத்துப்பார்த்தது... கற்பனை சிறகடித்துப் பறந்தது; காட்சி பிறந்தது! இப்படி..

வித்யா :- டேய் சாகர், மஞ்சள் சட்டைய மாட்டிகிட்டு எங்கேடா கிளம்பிட்டே?

சாகர் :- 'தொன்றல்' வார இதழ் வாங்கிட்டு வரலாம்னு போறேன்.

வித்யா :- ஆமா, அண்மையில் பாடத்திட்ட அதிகாரி ஒருவர் நம்ம தமிழைப்பற்றி கேவலமாய் பேசியிருப்பது பற்றி என்னடா நினைக்கிற?

சாகர் :- ‘தமிழ்த்துரோகிகள்.. கண்டிக்கவேண்டும்.. தமிழ் எங்கள் மூச்சு.. பொங்கி எழுவோம்.. குரல் கொடுப்போம்.. மகஜர் வழங்குவோம்.. முழங்கு சங்கே! என்று ஆவேசமாய் பொங்கி எழுவதால் மட்டுமே எதையும் சாதித்துவிட முடியாது.

வித்யா :- நல்லபடியா புத்தி சொன்ன எவன்டா கேட்கிறான்? அவனவனுக்குப் பெரிய அதிகாரி, அறிவாளி, பெரிய ஆள் என்று நினைப்பு!

சாகர் :- தவறு, அறியாமை, தடுமாற்றம் என்பதெல்லாம் எல்லாரிடமும் உண்டு! அதனால் உட்கார்ந்து அமைதியாய் பேசி பிரச்னைகளை நமக்குள் தீர்த்துக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

வித்யா :- டேய் தமிழைப் பழிப்பதும் தாயைப் பழிப்பதும் ஒன்னுடா? அதுவும் எப்ப பார்த்தாலும் சொந்த தாய்மொழியையே பழிக்கும் ஒருவனைப் பார்த்துக்கிட்டு சும்மா இருக்கக் கூடாதுடா.. நல்லா போட்டுத் தாக்கனும்!

சாகர் :- உணர்ச்சிகரமாய் எதையும் எதிர்கொள்ளாமல் உணர்வுப்பூர்வமாய் கைகோர்த்து செயல்பட வேண்டும்.

வித்யா :- டேய் நீயா இப்படி பேசுற? அன்னிக்கு ஒருத்தன் உன்னைப் ‘பொட்டப்பயன்னு’ சொல்லிட்டான்னு வானத்துக்கும் பூமிக்குமா என்னமா குதிச்ச! ஒரு தனிமனிதன் உன்னை ஏசுனதுக்கே உனக்கு அவ்வளவு கோபம் வருதே.. இது ஆறுகோடி தமிழ் மக்களோட தாய்மொழி! தமிழ் இனத்தோட உயிர்மூச்சு! எல்லா மொழிக்கும் மூத்தமொழி! இலக்கணம் இலக்கியத்துல உயர்ந்த மொழி! ஞானிகள் கூட போற்றி புகழும் மொழி! இந்த மொழிய வச்சுதான் நிறைபேர் பொழப்பு நடத்துறான்! நீயும்கூட பொழைக்கிற! அந்தத் தமிழை ஒருத்தன் கேவலமா பேசும்போது அமைதியா உட்கார்ந்து பேசனும்னு சொல்றியே உனக்கு எங்கேயாவது சூடு, சொரணை இருக்குதாடா? உனக்கு ஒரு நியாயம் தமிழுக்கு ஒரு நியாயமாடா? நீயும் தமிழ்த் துரோகிதாண்டா? உன்னோட ‘கலர’ காட்டிட்ட பாத்தியா?

சாகர் :- ??????????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  • ஆய்தன் : தமிழர் மேன்மை அழிப்பாரைப் போற்றுதற்கும் ஏடு பல வாழ்ந்தால்; எதிர்ப்பதன்றோ தமிழர்களின் எழுதுகோல் வேலை? ஏற்றசெயல் செய்வதற்கும் ஏன் அஞ்சவேண்டும்? (பாவேந்தர்)

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

தமிழ்த் துரோகிகளுக்குத் துணைபோகும் வார இதழ் ஒன்றின் ஆசிரியரின் முகத்திரையை கிழி கிழியென கிழித்தெரிந்துள்ள தமிழுயிர் வலைப்பதிவைப் எவ்வளவு பாராட்டினாலும் பொருந்தும். இப்படியொரு இணைய வலைப்பதிவு நம் நாட்டிற்குத் தேவையே! தமிழுக்கு எதிராகக் கீழறுப்பு வேலை செய்யும் கயவர்களைத் தமிழுயிர் குமுகாயத்திற்குக் காட்டிக் கொடடுக்கட்டும். தமிழ் மக்கள் அக்கயவர்களுக்கு சவுக்கடி கொடுக்கட்டும்.

வாழ்க தமிழுயிர்! வளர்க ஆய்தன் தமிழ்ப்பணி!

தமிழுயிரோடு தமிழ்ப்பணி செய்ய விரும்பும்,
இளஞ்சித்திரன் - வெள்ளி மாநிலம்

பெயரில்லா சொன்னது…

தமிழ் தந்த சோற்றில் வளர்ந்து வாழும் இம்மாதிரியான சோனகிரிகள் இருப்பதை விட இல்லாமல் அழிவது மேல்..அமைதி காத்து அமைதி காத்தே அழிந்து போகிறோம் நாம். தன் வீடு எரியும்போது மட்டுமே தாண்டிக் குதிக்கும் இவர்களிடம் இனி பேச்சுக் கூடாது. அதிரடிதான்! தொடரட்டும் உங்கள் பணி..

இனியன், பினாங்கு

பெயரில்லா சொன்னது…

அப்படி போடுங்கோ அரிவாளை! தமிழ் என்ற நம்முடைய உயிர்மொழியிடம் பிச்சையெடுத்துப் பிழைக்கும் அந்தப் பத்திரிகை ஆசிரியருக்கு நெத்தியடி கொடுத்தீங்க ஆய்தன். இவனுங்களுக்குத் தமிழால் வரும் பணம் மட்டும் வேண்டும். ஆனால், தமிழுக்கு எந்த இன்னல்; இழுக்கு; அழிவு; வந்தாலும் கவலையில்லை! நன்றிகெட்டவனுங்க! இவனுங்க வேற தொழில் செய்தாலும் தேவல! ஆய்தன் கொடுக்கும் அடி.. அடாவடி அல்ல.. அர்த்தமுள்ள அடி!

-கரிகாலன்,ஈப்போ,பேரா

பெயரில்லா சொன்னது…

தமிழ் உருவில் தமிழ்ப்பகைவர் இருக்கின்றார்-அவர்
தமிழர்களின் தாலிகளை அறுக்கின்றார் என்ற பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல் வரிகளுக்கு ஏற்ப சிலர் தமழை விற்று வயிறு வளர்த்துக்கொண்டே தமிழுக்கு இரண்டகம் செய்கிறார்கள் என்பதற்கு இவர்களைப் போன்ற இதழ் ஆசிரியர்களே தக்க சான்றாகும்.தமிழர் அல்லாத இவர் தமிழை விற்றுப் பிழை நடத்துவது மட்டுமல்லாமல் தமிழர்களையே மட்டம்தட்டி மழுங்கலர்களாக இருக்கத் தூண்டுவது மன்னிக்க முடியாத குற்றமாகும்.ஏதுங்கெட்ட தமிழர்கள் என்று விழித்தெழுந்து இவர் போன்றவர்களை அடையாளம் கண்டு அடியோடு அகற்றுகிறார்களோ அன்றுதான் இவர்களின் கொன்றமடங்கும்.அது வரை நமோன்றோர் தொடர்ந்து நமது தாக்குதல்களைத் தொடரவும் இவர்களின் உண்மைத் தோற்றத்தை வெளிப்படுத்திக் காட்டவும் தயங்க்க் கூடாது.

-எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழ்ர்கள் ஒன்றாதல் கண்டே!

-அறிவுடைநம்பி,பேராக்கு.

-