வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

திங்கள், 23 மார்ச், 2009

272 படிகளில் முழங்காலால் ஏறி முருகனிடம் வேண்டுதல்


இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் துயரங்கள் நீங்கி புதுவாழ்வு பெற வேண்டும் என்ற வேண்டுதலுடன் மலேசிய இளைஞர் ஒருவர் அங்குள்ள பத்துமலை முருகன் கோவில் படிக்கட்டுகளில் தனது முழங்காலால் ஏறி பிரார்த்தனை மேற்கொண்டார்.

கோலாலம்பூர் செந்தூல் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சவுந்தரராஜா நாயுடு என்பவரே. அண்மையில் பத்துமலையில் மேற்கண்ட சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டார். அப்போது பத்துமலைக் கோவிலில் உள்ள 272 படிகளையும் முழங்காலினாலேயே ஏறி இறங்கினார்.

இவருக்கு குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் துணை புரிந்தனர். "இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் நிம்மதி பிறக்க வேண்டி பத்துமலை முருகப்பெருமானிடம் பிரார்த்தனைச் செய்தேன். ஈழத் தமிழர்கள் தினம் தினம் செத்து மடிவது கொடுமையிலும் கொடுமை" என்று அவர் துயரத்தோடு கூறினார்.


@ஆய்தன்:-
தமிழ்க்கடவுளே.. தமிழனைக் காப்பாற்று..!

1 கருத்து:

கிருஷ்ணா சொன்னது…

பத்துமலை முருகனுக்கே இங்கே பாதுகாப்பில்லை! தமிழ் கடவுளின் சன்னதியிலேயே தமிழர் கொடுமையும் 'மலேசிய இடியமீன் காங்கிரஸ்' சார்பில் இனிதே நடந்தேறியது அன்று.. அப்பொழுதும் முருகன் கண் திறக்கவில்லை.. இப்போதும் கண் திறக்கவில்லை..! என்று பிறக்கும் விடிவுகாலம்.. என்று பிறக்கும் புதிய ஈழம்??!!!